×

நந்தா கல்லூரியில் வளாகத் தேர்வு

ஈரோடு, மே 22: வி.எக்ஸெல் கல்வி அறக்கட்டளை சார்பில் நந்தா முடநீக்கியல்  கல்லூரியில் வளாகத் தேர்வு நடந்தது. இத்தேர்வை வி எக்ஸெல் கல்வி அறக்கட்டளை நிறுவன மேலாளர் சிவபிரகாஷ் மற்றும் முதன்மை முடநீக்கியல் மருத்துவர்  தீபா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டா எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

முன்னதாக, கல்லூரியின் முதல்வர் மணிவண்ணன் வரவேற்றார். வி எக்ஸெல் கல்வி அறக்கட்டளை மேலாளர் சிவபிரகாஷ் பேசுகையில்,`நடத்தை மற்றும் உணர்ச்சிகள் போன்ற கோளாறுகளில் இருந்தும், அறிவுசார் இயலாமை, அஸ்பொர்கா மற்றும் டவுன் போன்ற நோய்குறிகளில் இருந்தும் விடுபட தேவையான ஆலோசனை மற்றும் அதற்கு தேவையான பயிற்சிகளை கடந்த 20 ஆண்டாக அளித்து வருகிறோம்.

விப்ரோ, ஹெக்ஸாவர், தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் முன்னேற்ற கழகம் போன்ற நிறுவனங்கள் எங்களுடன்  கூட்டு வைத்துள்ளன’ என்றார். இந்த வளாகத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளைத் தலைவர் வி.சண்முகன், செயலாளர்கள் எஸ்.நந்தகுமார், பிரதீப் மற்றும் எஸ்.திருமூர்த்தி, ஆகியோர் பாராட்டினர்.

Tags : Nanda College ,
× RELATED மயிலம் பொறியியல் கல்லூரியில் வளாக தேர்வு