×

ராசிபுரத்தில் பூட்டிக்கிடக்கும் நகராட்சி பூங்கா

ராசிபுரம். மே 22:   ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே, மழையின் போது முறிந்து விழுந்த மரத்தை வெட்டுவதற்காக பூட்டப்பட்ட பூங்கா, அதன் பின்பு திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான சிறுவர் பூங்கா உள்ளது. நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்தி வந்தனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாலை நேரத்தில் குடும்பம் குடும்பமாக பூங்காவுக்கு வந்து சென்றனர். இந்நிலையில் கடந்த வாரம் ராசிபுரத்தில் கனமழை பெய்தது. அப்போது, பலத்த காற்று வீசியதில் பூங்காவில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் மின்கம்பிகள் அறுந்து போனது. இதையடுத்து, பூங்காவை பூட்டிய ஊழியர்கள், தொடர்ந்து மரத்தை அகற்றி, மின்கம்பிகளை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். இப்பணிகள் முடிந்த நிலையில், தற்போது வரை பூங்கா பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இதனால், பூங்காவை சுற்றிப்பார்க்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பூட்டிக்கிடக்கும் நகராட்சி பூங்காவை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்பது, பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : municipality park ,
× RELATED ரூ.34 லட்சத்தில் கட்டப்பட்டது...