ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

நாமக்கல், மே 22: நாமக்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் மணிக்கூண்டு அருகில் ராஜீவ் காந்தியின் படம் வைக்கப்பட்டு மலர்  அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராம்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பெருமாள், நகர துணைத்தலைவர் சதாசிவம், நகர செயலாளர் தாமு, அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுதேஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28வது நினைவு  தினம் அனுசரிக்கப்பட்டது. புதிய பஸ் நிலையம் காமராஜர் சிலை முன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு நகர காங்கிரஸ்  கமிட்டி தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்  ராமசாமி, கிருஷ்ணன், தங்கராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

ராசிபுரம்:  ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஷேக்நவீத்  தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மெளன ஊர்வலம் சென்றனர். பின்னர் நகர காங்கிரஸ் கமிட்டி  அலுவலகத்தில் ராஜீவ் காந்தியின் உருவப்  படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி  மேற்பார்வையாளர் ஏகாம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சீனிவாசன்,   சுப்ரமணியன், மாவட்ட பொதுச்செயலர் சித்திக், வர்த்தக அணி சண்முகம், நகர  தலைவர் முரளி, மற்றும் வினாயக மூர்த்தி, சண்முகம், குபேர்தாஸ் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

Tags : Rajiv Gandhi Memorial Day ,
× RELATED ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் அமைதி ஊர்வலம்