×

மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

நாமக்கல், மே 22:  நாமக்கல் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட வானிலையில் வானம் பொதுவாக காணப்படும். மழைக்கான வாய்ப்பு குறைவாகவும் காணப்படும். அடுத்த 3 நாட்களுக்கு கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கோழிகளில் வெப்ப அயற்சி மற்றும் வெப்ப அதிர்ச்சியும் ஏற்படலாம். தென்மேற்கு பருவ மழையானது எதிர்பார்க்கப்பட்ட முதல் 6 நாட்களுக்கு பிறகு தொடங்கலாம். எனவே, அடுத்த 15 நாட்களுக்கு வெய்யிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும். மேலும் கோழிகளில் தீவன எடுப்பு 100 கிராம் என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம். கோழிப்பண்ணையாளர்கள் வெப்ப தாக்குதலில் இருந்து விடுபட, கோழித்தீவனத்தில் அதிகளவில் அமினோ அமிலங்கள் வைட்டமின்கள் மற்றும் தாவர எண்ணெய் போன்றவற்றை சேர்க்கவேண்டும். கடந்த ஒரு வாரமாக கோடை மழை பொய்த்து விட்டதாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், கால்நடைகளை காலையில் மேய்ச்சலுக்கு அனுப்புவது, நிழலில் ஒதுக்கி தீவனமளிப்பது மற்றும் சிறிதளவு பச்சைப்புற்கள் அளிப்பது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். மேலும் கால்நடைகளுக்கு தேவையான அளவு தண்ணீரை அளிப்பது மிகவும் அவசியம் ஆகும்.
இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : district ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...