ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி

கிருஷ்ணகிரி, மே 22:  கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் உறுதிமொழியை படிக்க, அரசு அலுவலர்கள் திரும்ப படித்து உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் திருவுருவ படத்திற்கு கலெக்டர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ராமமூர்த்தி (பொ), லட்சுமணன் (ஊரக வளர்ச்சி), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், கலெக்டர் அலுவலக மேலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சம்பத் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Rajiv Gandhi Memorial Day ,
× RELATED குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு...