×

தேவதானத்தில் நடந்த தேரோட்டத்தில் தகராறு ஒருவருக்கு கத்திக்குத்து

ராஜபாளையம், மே 22: ராஜபாளையம் அருகே தேவதானத்தில் நடந்த தேரோட்டத்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் கோயில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தின் போது செல்வக்குமார் (37), அருண்குமார் (19) இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அருண்குமார் நேற்று முன்தினம் இரவு செல்வக்குமாரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.

Tags :
× RELATED சிகரெட் தகராறை தடுத்த 2 பேர் மீது தாக்குதல்