×

திருவில்லிபுத்தூர் பகுதியில் வறண்டு கிடக்கும் கண்மாய்கள், குளங்கள்

திருவில்லிபுத்தூர், மே 22: தொடர் மழையின்மை மற்றும் கொளுத்தும் வெயில் காரணமாக திருவில்லிபுத்தூர் நகரில் முக்கியமான குளங்கள், கண்மாய்கள் அனைத்தும் வறண்டு போய் உள்ளன. திருவில்லிபுத்தூர் நகரைப் பொறுத்தவரை நிலத்தடி நீர்மட்டம் உயர காரணமாக உள்ள ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் மிகப்பெரிய கண்மாய் ஆன பெரியகுளம் கண்மாய் மற்றும் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோவில் பழையகுளம் மற்றும் புதிய குளம் வறண்டு காணப்படுகிறது.

அதேபோல் நகரை ஒட்டியுள்ள பொன்னாங்கண்ணி கண்மாய், வடமலை குறிச்சி கண்மாய் ஆகியவையும் வறண்டு வருகிறது. தொடர் மழையின்மை, வறட்சி மற்றும் கொளுத்தும் வெயில், பருவநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் கண்மாய் மற்றும் குளங்களில் வறண்டு வருவதால் திருவில்லிபுத்தூர் நகர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags : area ,Srivilliputhur ,
× RELATED வாட்டி வதைக்கும்...