×

இலவச மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரி, மே 22:  கிருஷ்ணகிரி மாவட்டம், நாரலப்பள்ளி ஊராட்சியில் கிராமப்புற சமூக நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் இரண்டு நாள் மருத்துவ முகாம் நடந்தது. மகாராஜகடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் பெரியசக்கனாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது. முகாமினை கேவிகே முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ், கிருஷ்ணகிரி தொழிலதிபர் ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று துவக்கி வைத்தனர்.
அறக்கட்டளையின் நிறுவனரான இளம் விஞ்ஞானி ராஜேஷ் தலைமை வகித்தார். முகாமில் கிருஷ்ணகிரி அகர்வால் கண் மருத்துவமனை, ஓசூர் ஸ்ரீசந்திரசேகரா மருத்துவமனை, காவேரிப்பட்டணம் ஜிபி மருத்துவமனை, கிருஷ்ணகிரி துளசி மருந்தகம், கோவை சகாய் மறுவாழ்வு மையம், மேகலசின்னம்பள்ளி முதன்மை சுகாதார மையம், காவேரிப்பட்டணம் ஜேசிஐ உள்ளிட்டவை பங்கேற்று, பொதுமக்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் மற்றும், சிகிச்சைகள் அளித்தனர்.
அத்துடன் கண் பாசோதனை, இருதய பரிசோதனை, பல் பரிசோதனை, இரத்த வகை பிரிவு, ரத்தத்தில் சக்கரை அளவு, ரத்த அழுத்தம், முதுகு தண்டுவட பரிசோதனை மற்றும் பொது மருத்துவம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமகள்  கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags : camp ,
× RELATED திருவாரூர் முத்துப்பேட்டை இலவச...