×

ராஜபாளையம் அருகே சேத்தூரில் நாய்க்கு விஷம் வைத்து கொன்றதால் மோதல் 5 பேர் மீது வழக்கு

ராஜபாளையம், மே 22: ராஜபாளையம் அருகே நாய்க்கு விஷம் வைத்து கொன்றதால் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ராஜபாளையம் அருகே சேத்தூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் என்ற கனி (37). நாய் வளர்த்து வந்தார். இந்த நாய் அடிக்கடி தொந்தரவு செய்வதாக கருதி இப்பகுதியை சேர்ந்த சிலர் விஷம் வைத்து நாயை கொன்றுள்ளனர். ஆத்திரமடைந்த கனி சத்தம் போட்டு பேசி கொண்டிருந்தார். இதை ராஜாவின் மனைவி கணபதி என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் விலக்கி விட்டனர்.

இதனையடுத்து கணபதி அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததையடுத்து மாணிக்கம், கண்ணன், பால்பாண்டி, மதுரை பாண்டி மாரிமுத்து ஆகிய உருட்டுக்கட்டையுடன் லட்சுமணன் என்ற கனி வீட்டிற்கு சென்று தாக்கினர். காயமடைந்த அவர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தூர் போலீசார் கணபதியின் உறவினர்கள் மாணிக்கம் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : persons ,Sethur ,Rajapalayam ,
× RELATED திருநள்ளாறு அடுத்த சேத்தூர் மகா...