×

தர்மபுரி பாரத் டெக்ஸ் டைல்சில் கோடைகால அதிரடி விற்பனை

தர்மபுரி, மே 22: தர்மபுரி பாரத் டெக்ஸ்டைல்சில், கோடைகாலம் மற்றும் ரம்ஜான் பண்டிகையொட்டி சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. ஏழை, எளியோர் பயனடையும் வகையில் குறைந்த விலையில் சேலைகள் விற்பனை செய்யப்படுகிறது. ரமலான் நோன்புக்கு ஏழை, எளிய பெண்களுக்கு வழங்குவதற்கு மொத்தமாக ஆர்டர் செய்து 100 சேலைகளுக்கு மேல் வாங்கிச் செல்கின்றனர். சிறந்த ரக சேலைகள் ₹90 முதல் ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி பாரத் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தலைவர் வைத்திலிங்கம் கூறுகையில், தர்மபுரி ஜவுளி சாம்ராஜ்ஜியத்தின் கடல் பாரத் டெக்ஸ்டைல்சில் கோடை கால சிறப்பு விற்பனை, ரமலான் நோன்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் எளிதாக வாங்கும் வகையில் மிக குறைந்த விலையில் சேலைகள் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டாக் உள்ளவரை மட்டுமே சிறப்பு விற்பனை செய்யப்படும். கோடைகாலத்தில் அனைத்து தரப்பு பெண்களும் சேலைகள் வாங்கி பயனடைவேண்டும் என்றார்.

Tags : Summer Action Sale ,Dharmapuri Bharat ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா