தொடர் கொள்ளை சம்பவம் ஒருவர் கைது; 6 பவுன் மீட்பு

தேனி, மே 22:  தேனி அருகே வீடு புகுந்து திருடிய கும்பலை சேர்ந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 6 பவுன் நகையினை மீட்டனர். தேனி அருகே கொடுவிலார்பட்டியில் வசிக்கும் ஸ்டேட் வங்கி ஊழியர் கோபாலகிருஷ்ணன், பழனிசெட்டிபட்டியில் வசிக்கும் மின்னல்கொடி என்பவரது வீடுகளில் மூன்று மாதங்களுக்கு முன்னர் நகைகள் திருடு போயின.

இது தொடர்பாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா தலைமையில் போலீசார் நேற்று இரவு போடி விலக்கு அருகே வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக டூவீலரில் வந்த கம்பம் தினகரன் நகரை சேர்ந்த ஹரீஸ்(24) என்பவரை சந்தேக வழக்கில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது இந்த திருட்டு சம்பவங்களில் இவரும், இவரது கூட்டாளி ரமேஷ் என்பவரும் ஈடுபட்டது தெரியவந்தது. ஹரீசை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 6 பவுன் நகையினை மீட்டனர். இவரது கூட்டாளி ரமேசை தேடி வருகின்றனர்.

Tags : recovery ,
× RELATED விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது