ராஜீவ்காந்தி நினைவு தினம் திருச்சியில் காங்கிரசார் மவுன ஊர்வலம் ப.சிதம்பரம் பங்கேற்பு

திருச்சி, மே 22:  மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகமான அருணாசல மன்றத்தில் இருந்து மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. மவுன ஊர்வலத்திற்கு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகித்தார். ஊர்வலம் மெயின்கார்டுகேட், சிங்காரதோப்பு, மேலப்புலிவார்டு ரோடு, மரக்கடை அருகே முடிவடைந்தது. இந்த மவுன ஊர்வலத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டனர். தொடர்ந்து மவுன ஊர்வலம் முடிவடைந்த இடத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் மாவட்டத்தலைவர் ஜவஹர், மாநில பொதுக்குழு உறுப்பினர் லூயிஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Tags : Rajiv Gandhi Memorial Day Celebrations ,Congress ,
× RELATED தே.காங்கிரசுக்கு 16 பதவிகள்