×

ஏற்பாடுகள் தயார் ஆலங்குடியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

திருப்புத்தூர், மே 22: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே ஆலங்குடி மதகடி நாச்சி அம்மன் கோயில் 29ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரியமாடு பிரிவில் 7 ஜோடிகள் பங்கேற்றன. அதில் அ.வல்லாலப்பட்டி குமார் மாடு முதல் இடத்தையும், மேலூர் நாகப்பன்பட்டி செந்தில் இரண்டாம் இடத்தையும், வெளிமுத்தி வாகிணி மூன்றாம் இடத்தையும், கூத்தலூர் சர்தையா நான்காம் இடத்தையும் வென்றனர்.

சின்னமாடு பிரிவில் 12 ஜோடிகள் பங்கேற்றன. அதில் அமராவதிபுதூர் வேலுகிருஷ்ணன் முதல் இடத்தையும், சொக்கலிங்கம்புதர் சக்தி இரண்டாம் இடத்தையும், பதனக்குடி சிவசாமி உடையார் மூன்றாம் இடத்தையும், அரசன்குடி குருநாதசாமி மாடு நான்காம் இடத்தையும் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு மரியாதை செலுத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags : Alangudi ,
× RELATED எவ்வித முன்னேற்பாடும் செய்யாமல்...