ஒத்தைக்கு ஒத்த... வறண்ட வானிலை காணப்படும் கண்களை கவரும் பூக்கள் சிவகங்கை மாவட்டத்தில் வழக்கம் போல் ஏமாற்றிய கோடை மழை

சிவகங்கை, மே 22: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் ஏப்ரல், மே மாதங்களில் மழை பெய்த நிலையில், தற்போது இதுவரை மழை பெய்யாததால் விவசாயிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் இறுதியாக கடந்த ஆண்டு டிசம்பர் தொடக்கத்தில் லேசான மழை பெய்தது. அதன் பிறகு கடந்த மூன்று மாதங்கள் மற்றும் இம்மாதத்தில் இதுவரை மழை இல்லை. கடந்த ஆண்டு சராசரி மழையைவிட சற்று கூடுதலாக பெய்திருந்தது. ஆனால் மவட்டத்திற்கு பலன் தரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் போதிய மழை இல்லை. வடகிழக்கு பருவ மழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை குறைவாகவே இருந்தது.

இதனால் கடந்த ஆண்டு இறுதி முதல் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே குளம், கண்மாய் வறண்டு போக தொடங்கின. இந்நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் அனைத்து கண்மாய்களும் முழுமையாக வறண்டு போயின. இதனால் தற்போதைய கோடை காலத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டு குடிநீர் உள்ளிட்ட அனைத்து நீர் தேவைகளுக்கும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் வழக்கமாக ஏப்ரல், மே மாதத்தில் கோடை மழை பெய்யும்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் சராசரியாக 1.85 செ.மீ மழை பதிவானது. அதிகபட்சமாக சிவகங்கையில் 5.72 செ.மீ மழை பதிவானது. அக்னி நட்சத்திர காலத்தில் இந்த மழை பெய்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை பெயரளவிற்கு கூட மழை இல்லை. லேசான மழை இருந்தால் அதுவே பெரிய ஆறுதலாக இருக்கும் என்ற நிலையில் இது வரை மழை இல்லாதது அனைத்து தரப்பினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் கூறியதாவது: ‘‘தொடர்ந்து பல மாதங்களாக லேசான மழை கூட இல்லாதது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதேநிலை நீடித்தால் இன்னும் வெப்பம் அதிகரிக்கும். குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் கடும் அவதிப்படும் நேரத்தில் மழையே பெய்யாமல் இருப்பது பாதிப்பை மேலும் அதிகரிக்கும். லேசான மழை இருந்தாலே வெப்பம் தணிக்கப்படும். கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களுக்கு சற்று தேவை குறையும். ஆண்டுதோறும் வழக்கமாக பெய்யும் மழை கூட இந்த ஆண்டு இன்னும் பெய்யாதது அதிர்ச்சியளிக்கிறது’’ என்றனர்.

Tags : Sivagangai ,district ,
× RELATED காரைக்குடியில் பட்டா கத்தியுடன் ரவுடிகள் ரகளை