மாவட்டம் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ராஜீவ் நினைவு தின ஊர்வலம்

ராமநாதபுரம், மே 22: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் காங்கிரஸ் சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட தினமான நேற்று, காங்கிரஸ் சார்பில் ராமநாதபுரத்தில் அமைதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராமநாதபுரம் மணிக்கூண்டு பகுதியில் ராஜீவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அரண்மனை முன் துவங்கிய மவுன ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். பார்வையாளர் இதயத்துல்லா முன்னிலை வகித்தார். முதுகுளத்தூர் எம்எல்ஏ மலேசியா பாண்டியன், அகில இந்திய கமிட்டி உறுப்பினர் செல்வத்துரை அப்துல்லா, மாவட்ட தலைவர்கள் விக்டர், ரமேஷ் பாபு உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். ஊர்வலம், வண்டிக்காரத் தெரு, வழிவிடு முருகன் கோயில் வழியாக அண்ணா சிலை முன் நிறைவடைந்தது.

Tags : Rajiv Memorial Day ,Rally ,
× RELATED விழிப்புணர்வு பேரணி