×

வீறுகவியரசர் முடியரசன் அவைக்கள கூட்டம்

காரைக்குடி, மே 22: காரைக்குடியில் வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம் சார்பில் மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் நினைவேந்தல் கூட்டம் மற்றும் முடியரசன் கவிதைகளில் முனைவர் பட்டம் பெற்றோருக்கு பாராட்டு விழா நடந்தது. எழுத்தாளர் பாரிமுடியரசன் வரவேற்றார். முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன் தலைமை வகித்தார். திருச்சி அனைத்துலகத் தமிழ் மாமன்றத் தலைவர் யோகநாதன், அழகப்பா பல்கலைக்கழக தமிழ் பண்பாட்டு மைய இயக்குநர் செந்தமிழ்ப்பாவை  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடியரசன் கவிதைகளை ஆய்வு பொருண்மையாக கொண்டு முனைவர் பட்டம் பெற்ற ஸ்டீபன் மிக்கேல்ராஜ், முனைவர் வனிதா, கண்ணன், சேதுகல்பனா ஆகியாேருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ராகவேந்திரன் நன்றி கூறினார். முடியரசனார் நூற்றாண்டு தொடங்குவதை முன்னிட்டு அவருக்கு சிலையும், மணிமண்டபம் கட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Viceroy ,Crown Prince ,
× RELATED துபாய் ரன் 2023 : ஆயிரக்கணக்கான அரபு...