குண்டாஸில் 2 வாலிபர்கள் கைது

மதுரை, மே 22:  மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த மதிவாணன் மகன் ரவிக்குமார் (20), இவர் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின்பேரில், அவனியாபுரம் போலீசார் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ரவிக்குமாரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

இதேபோல மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த முருகேசன் மகன் இதயராஜா (27), இவர் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் புதூர் போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இதயராஜவை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More
>