×

கறம்பக்குடி அருகே உரக்கடைகாரரை வெட்டியவர் கைது

கறம்பக்குடி, மே22: கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் புதுவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் திருமேனி (46). புதுவிடுதி சாலையில் உரக்கடை நடத்தி வருகிறார். இவரும் முத்தன் விடுதி கிராமத்தை சேர்ந்த ஆசை என்ற நடராஜன் (29) என்பவரும் முன் விரோதம் இருந்து வந்தது.  இந்நிலையில் நேற்று  திருமேனி தனது  கடையில் இருந்தபோது அங்கு வந்த நடராஜன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து திருமேனியை  வெட்டி உள்ளார். படுகாயமடைந்த திருமேனியை அருகில் இருந்தவர்கள் மீட்டு  தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருமேனி கொடுத்த புகாரின் பேரில் ரெகுநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது  செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : booth ,Karambukudi ,
× RELATED பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது: தேர்தல் ஆணையம்