×

புதுக்கோட்டை மாவட்டத்தில் சேதமடைந்த மினி குடிநீர் தொட்டிகள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை, மே 22:  புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 497 கிராம பஞ்சாயத்துகள் உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாதததால் தற்போது சிறப்பு அலுவலகங்கள் மூலம் தற்போது அலுவலக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிராம மக்களில் குடிநீர் தேவைக்கு ஏற்ப பல்வேறு பகுதிகளில்  மக்களின் பயன்பாட்டிற்கு மினி குடிநீர் தொட்டியை பஞ்சாயத்து நிர்வாகம் அமைத்தது.  இதனை அந்தெந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி தண்ணீர் பிடித்து வந்தனர். இந்நிலையில் பல தொட்டிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் பழுதடைந்தது. இதனை அந்தெந்த பஞ்சாயத்து நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்பதால் தற்போது இந்த சிறு மின்விசை குடிநீர்  தொட்டி செயல்படாமல் கிடக்கிறது.

குறிப்பாக குடிநீர் டேங் மற்றும் ஆழ்குழாய் கினற்றில் இருந்து குடிநீர் தொட்டிக்கு தண்ணீரை கொண்டு வரும் பைப்புகள், மோட்டாரை இயக்க பயன்படும் மின்ஒயர்கள் அனைத்தும் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதிவாசிகள் குடிநீருக்கு அலைய வேண்டியுள்ளது.   இதனால்  அந்த பகுதிவாசிகள் தண்ணீருக்காக பல்வேறு  சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். மேலும் தண்ணீர் காசுகொடுத்து வாங்க வேண்டிய அவலநிலைக்கு மக்கள் சென்றுள்ளனர். இதனால் பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர்கள் அந்தெந்த ஒன்றியங்களில் உள்ள பஞ்சாயத்துகளில் ஆய்வு செய்து எங்கெல்லாம் மினி குடிநீர் தொட்டிகள் சேதமடைந்துள்ளதை முறையாக கணக்கு எடுத்து விரைந்து சரிசெய்து வழக்கம்போல் குடிநீர் வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:

பல்வேறு கிராமங்களில் பல இடங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் பிரச்னை வரும்போது அந்த இடங்களில் பொதுமக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஞ்சாயத்து நிர்வாகம் மினி குடிநீர் தொட்டிகளை அமைத்துகொடுத்தனர். அமைத்து சில மாதங்கள் நல்ல முறையில் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து பராமரிப்பு இல்லாததால் பொதுமக்கள் பயன்படுத்தி  வந்த குடிநீர் தொட்டி பழுதடைந்து சில மாதங்கள் ஆகியும் இன்னும்  பஞ்சாயத்து  நிர்வாகம் சரிசெய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாங்கள் தண்ணீருக்கு நெடுந்தூரம் அலைய வேண்டியுள்ளது. சில நேரங்களில் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. மினிகுடிநீர்  தொட்டியில் முதலில் மோட்டார் பழுதடைந்தது .இதனை சரிசெய்ய வேண்டும் என்று  பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் பிறகு தொடர்ந்து குழாய்கள்,  குடிநீர் டேங்குள் அனைத்தும் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமங்களை அனுபவிக்கின்றனர்.  தண்ணீர் முறையாக கிடைக்காததால் நாங்கள் தினசரி மிகுந்த பாதிப்புகளை சந்தித்து வருகின்றோம். மேலும் காலையில் பள்ளி குழந்தைகள் மற்றம் அலுவலகம் செல்வோர் உரிய நேரத்தில் போதுமான தண்ணீர் கிடைக்காததால் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர். இதனால்  இனியாவது பஞ்சாயத்து  நிர்வாகம் விரைந்து தகுந்த நடவடிக்கையை எடுத்து மினி குடிநீர் தொட்டியை சரிசெய்ய வேண்டும் என்றனர். குடிநீர் டேங் மற்றும் ஆழ்குழாய் கினற்றில் இருந்து குடிநீர் தொட்டிக்கு தண்ணீரை கொண்டு வரும் பைப்புகள், மோட்டாரை இயக்க பயன்படும் மின்ஒயர்கள் அனைத்தும் சேதமடைந்து கிடக்கிறது.

Tags : Citizens ,district ,Pudukottai ,
× RELATED மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 26,875 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு