×

மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை கந்தர்வகோட்டையில் உலக மனச்சிதைவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

கந்தர்வகோட்டை, மே 22:  கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையும், ஸ்கார்ப் இந்தியா (கிராம தொலைதூர மனநல சேவை) இணைந்து மனநலம் மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் செந்தில்குமார் பேசுகையில், மே 24ம் தேதியை உலக மனச்சிதைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதில் உலக அளவில் ஒரு சதவீத மக்கள் மனசிதைவினால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் மனச்சிதைவு வருவதற்கான காரணம் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம்.மேலும் உடல் நலத்தை போல் மனநலத்தையும் ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணமடையலாம். மனநோயின் அறிகுறிகள் வகைகள் பற்றியும் கூறினார். கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராதிகா மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் ஸ்கார்ப் நலப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் சிவரஞ்சனி வரவேற்றார். கவிதா நன்றி கூறினார்.

Tags :
× RELATED அரிமளம் அருகே நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்