×

தொண்டன் ஏரியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

அரியலூர், மே 22: அரியலூர் அருகே சமூக ஆர்வலர்கள் மூலம் தூர்வாரப்பட்ட தொண்டன் ஏரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. அரியலூர் மாவட்டம் விளாங்குடி ஊராட்சியில் மக்கள் சேவை சங்கம், என்ஆர்ஐ அம்பலவாணன், ஜெயராமன் மற்றும் பலரின் உதவியுடன் சமூக ஆர்வலர் தியாகராஜன் ரூ.2 லட்சம் செலவில் ஏரியில் இருந்த காட்டாமணக்கு, கருவேல மரங்களை அகற்றி தூர்வாரினார். இந்த தொண்டன் ஏரியில் கோடையில் வெப்பத்தை போக்கவும், பறவைகளுக்கு பழம்தரும் மரங்கள், மண் அரிப்பை தடுக்கும் வகையிலும் அரசமரம், இலுப்பை, நாவல், புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் பாதுகாப்பு கம்பி வேலியுடன் ஏரியை சுற்றி நடப்பட்டது. நிகழ்ச்சியில் தனியார் டிரஸ்ட்டை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags : Sandy ,lake ,Thondan ,
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!