×

வாக்குஎண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பு

பெரம்பலூர்,மே.22: வாக்குஎண்ணும் பணியில்ஈடுபடவுள்ள அலுவலர்கள் தொகுதி வாரியாக கணினிகுலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும்நிகழ்ச்சி தேர்தல் பொதுப் பார் வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரி தலைமையில் நடந்தது.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவர்கள் தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி பெரம்பலூர்  கலெக்டர் அலு வலகக் கூட்டஅரங்கில், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொதுப் பார்வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரி தலைமையில், பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் சாந்தா முன்னிலையில் நேற்றுமாலை நடந்தது.

கடந்த ஏப்ரல் 18ம்தேதியன்று நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கட்பட்ட துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, குளித்தலை, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச் சாவ டிகளில் பதிவான வாக்குகள்அனைத்தும் தனலட்சுமிசீனிவாசன் கல்விநிறுவன வளாக த்தில் பாதுகாப்பாக அறையில்வைத்துப்பூட்டி சீல்வைத்து, துப்பாக்கி ஏந்திய துணை இராணுவ பாதுகாப்புடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி, இத்தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை (23ம்தேதி) எண்ணப்பட உள்ளன. அதில் தபால்வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மிண்ணனுவாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இவ்வாக்கு எண்ணும்பணிகளில் நுண்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட நிலைகளில் 306அலுவலர்கள் ஈடுபடஉள்ளனர்.மேலும் வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சட்டமன்றத்தொகுதி வாரியாக 14மேஜைகள் அமைக்கப்பட்டு பல்வேறு சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்குரிய சட்டமன்ற தொகு திகள் கணினி குலுக்கல்முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் வாக்கு எண்ணும் நாளன்று வாக்குஎண்ணிக்கைக்கு முன்பாக அவர்களுக்குண்டான மேஜைகள் நேற்று கணினி குலுக்கல்முறையில் ஒதுக்கீடுசெய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கீதா லெட்சுமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது