காரைக்காலில் ராஜீவ்காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி

காரைக்கால், மே 22:  காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் நிகழ்ச்சி பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியாக நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜுவ்காந்தி படத்திற்கு, புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ கீதா ஆனந்தன், கலெக்டர் விக்ராந்த்ராஜா, மாவட்ட போலீஸ் எஸ்.எஸ்.பி ராகுல் அல்வால் மற்றும் மும்மத தலைவர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகள் உள்ளிட்ட ஏராளமானோர் ராஜுவ்காந்தி புகைப்படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இறுதியாக, தேசபக்தி பாடல்கள் இசைக்கப்பட்டது.

Tags : Rajiv Gandhi Memorial Day ,Karaikal ,
× RELATED காரைக்காலில் அவலம் காமராஜர் சாலையில் கரணம் தப்பினால் மரணம்