×

தேர்தல் விதியை காரணம் காட்டி உடைக்கப்பட்ட கொடிமேடை கற்குவியல் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கீழ்வேளூர், மே 22: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி முறை தொடங்கிய நிலையில் நீதி மன்ற உத்தரவை காரணம் காட்டி அரசியல் கட்சி, அமைப்புகள், சங்கங்கள் சார்பில் சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளை உடைக்கப்பட்டு அங்கேயே குவியலாக போடப்பட்டதை அரசு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா, பெரியார், காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர். போன்ற பெரிய தலைவர்களை வைத்து  நகரம், கிராமங்களில் தங்கள் கட்சி கொடியை ஏற்ற கொடி மேடை அமைத்து அதில் வரலாற்றை நினைவு கூறும் வகையில், கல்வெட்டுகள் பதிக்கப்பட்டு வந்தது. தமிழகதில் பிரதமர்கள், முதல்வர்கள், கட்சி தலைவர்கள்  என சுமார் 70 ஆண்டு காலங்களாக அமைக்கப்பட்ட  கல்வெட்டுகள்  பல இடங்களில் உள்ளது. இந்த கல்வெட்டுகள் தங்கள் கிராமத்திற்கு, நகரத்திற்கு பிரதமர், முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான வரலாற்று சுவடுகளாக  பாதுகாத்து வந்தது. மேலும் இந்திராகாந்தி, அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். போன்ற  முன்னாள் பிரதமர்கள், முதல்வர்கள் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் கொடி கம்பங்கள், கல்வெட்டுகள், தலைவர்கள் சிலைகளை அகற்ற நீதி மன்றம் உத்தரவிட்டதாக வருவாய்த்துறை, காவல் துறையினர் தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்து வந்த நிலையில், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர், அமைப்பினர், சங்கத்தினருக்கு முன் அறிவிப்பு கொடுக்காமல்  கல்வெட்டுகள், கொடி மேடைகள், தலைவர்கள் சிலைகளை  பொக்லைன் இயந்திரம் கொண்டு உடைத்து நொறுக்கி அப்புறப்படுத்தாமல் அங்கேயே போட்டுவிட்டு சென்றனர். இதனால் அரசியல் கட்சியினர், அமைப்புகள், சங்கங்கங்களை சேர்ந்த  கொந்தளித்தனர். இந்நிலையில் கொடி மேடைகள், கல்வெட்டுகள் உடைக்கப்பட்டவை அப்புறப்படுத்தாமல் பல இடங்களில்  உடைக்கப்பட்ட கற்குவியலாக அப்படியே ஒரு மாதத்திற்கு மேலாக கிடப்பதால் பாம்பு போன்ற விஷ பூச்சிகளின் புகலிடமாகவும், குப்பை தேங்கும்  இடமாக உள்ளது. தற்போது உடைக்கப்பட்ட கற்குவியல்களை அகற்றி சுத்தம் செய்வது வருவாய் துறையா?, ஊரக வளர்ச்சி துறையாக என்ற கேள்வியால் அகற்றபடாமலேயே உள்ளது. எனவே உடைக்கப்படட கல்வெட்டுகள், கொடி மேடைகளின் கற்குவியல்களை அரசு அகற்றி அந்த இடங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் எதிர்பாக்கின்றனர்.

Tags : breakdown ,crackdown ,
× RELATED விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே...