வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்திற்குள் பிளாஸ்டிக் கொண்டு செல்ல தடை

வேதாரண்யம், மே 22: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலய பகுதிக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். கோடியக்கரை சரணாலய பகுதிகளில் உள்ள வனவிலங்குகளுக்கு தற்போது தண்ணீர் தட்பாட்டை போக்குவதற்கு நாள்தோறும் 15 ஆயிரம் லிட்டர் ஊற்றப்படுகிறது. தற்போது கூடுதலாக நேற்று முதல் 15 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றப்படுகிறது.  கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் 23 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் என்றும் பசுமை மாறாக்காடாக  அமைந்துள்ளது. இந்த காட்டு பகுதியில் வனவிலங்குகள் சரணாலயமும் பறவைகள் சரணலாயமும் உள்ளது.   விலங்குகள் சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், நரி, குரங்கு, குதிரை, உடும்பு, மயில், காட்டுப்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த சரணாலயத்தில் உள்ள வனவிலங்குகளில் குடிதண்ணீர் தேவைக்காக காட்டு பகுதிகளில் 56 இடங்களில் இயற்கையான குளங்களும் மற்றும் செயற்கையாக 10 இடங்களில் கட்டப்பட்ட தொட்டிகளும் வனத்துறையினரால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது காட்டு பகுதிகளில் போதுமான மழை பெய்யாததால் குளங்களில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதையடுத்து  வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்காக வனத்துறையினர் நாள்தோறும் டேங்கர்கள் மூலம் 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றப்படுகிறது. எனவே கோடியக்கரை சரணாலயத்திலிருந்து வனவிலங்குகள் வெளியேறாமல் தடுத்து  தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியை போக்க போதுமான தண்ணீரை வனத்துறையினர் காலை மாலை இருவேலைகளிலும் ஊற்றி வருகின்றனர். மேலும் வனவிலங்கு சரணாலயத்தில் வரும் சுற்றுலா பயணிகள் முற்றிலுமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் எனவும், பிளாஸ்டிக் பொருட்கள் வனவிலங்கு சரணாலயத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது  என்றும் கோடியக்கரை வன சரகர் (பொறுப்பு) சேகர் தெரிவித்துள்ளார்.

Related Stories: