×

வாக்கு எண்ணிக்கை சுற்றுக்கள் விபரம்:

கரூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குஎண்ணிக்கை சுற்றுக்கள், மேசைகள் விபரம்.

எம்பி தொகுதியில் இடம்பெற்றுள்ள சட்டமன்றதொகுதிகள்
 வேடசந்தூர் மேசைகள்    14     சுற்றுக்கள்     22
 அரவக்குறிச்சி மேசைகள்     14     சுற்றுக்கள்     18
 கரூர் மேசைகள்    14     சுற்றுக்கள்     19
 கிருஷ்ணராயபுரம்
 மேசைகள்    14     சுற்றுக்கள்     19
 மணப்பாறை மேசைகள்    14     சுற்றுக்கள்     24
 விராலிமலை மேசைகள்    14     சுற்றுக்கள்     19
 அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்
 மேசைகள் 14, சுற்றுக்கள் 18,கரூர் பெரிய ஹாலில் அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கை

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 63வேட்பாளர்கள்போட்டியிடுவதால் சிறிய இரு அறைகள் வாக்குஎண்ணிக்கைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. திமுக வேட்பாளர்செந்தில்பாலாஜி, இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார். 63வேட்பாளர்களின் முகவர்கள் நிற்ககூட இடம் இல்லை. எனவே இடத்தை மாற்றி பெரிய இடத்தில் மையத்தை அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதன்அடிப்படையில் பெரியஹால் வாக்கு எண்ணிக்கைக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்குவாக்கு எண்ணிக்கை அமைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

Tags : Toll Counters ,
× RELATED குறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்