×

வாகன ஓட்டுனர்களுக்கு எஸ்பி அறிவுரை வெற்றிலை விலை வீழ்ச்சி

கரூர், மே 22: கரூரில் வெற்றிலை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கரூர் மற்றும் புகழூர் வட்டாரங்களில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. வெள்ளைக்கொடி, கற்பூரி ரகங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இங்கு பறிக்கப்படும் வெற்றிலை மூட்டைகள் வேலாயுதம்பாளையம் பகுதிகளில் செயல்படும் தனியார் மண்டிகள், சங்க மண்டிக்கும் கொண்டுசெல்லப்பட்டு ஏலம் விடப்படுகிறது. தமிழகத்தின் மாவட்டங்களுக்கு மட்டுமின்றி,ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. கடந்த வாரம் இளங்கால் வெள்ளைக்கொடி வெற்றிலை 104கவுளி கொண்ட ஒரு சுமை ரூ.6ஆயிரமாக இருந்தது தற்போது ரூ.4500ஆக குறைந்துவிட்டது. முதிகால்வெள்ளைக்கொடி வெற்றிலை ரூ.3ஆயிரமாக இருந்து தற்போது ரூ.2ஆயிரமாக குறைந்துவிட்டது. இளங்கால் கற்பூரி வெற்றிலை ரூ.4500ல் இருந்து ரூ.1800க்கும், முதிகால் கற்பூரி ரூ,,2200ல் இருந்து ரூ.1800ஆக விலை குறைந்துவிட்டது. விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags : vehicle drivers ,
× RELATED நாமக்கல்லில் வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்