×

குண்டும், குழியுமான வடக்குமேட்டு சின்னப்பனையூர் சாலைசீரமைப்பு

தோகைமலை, மே 22: தினகரன் செய்தி எதிரொலியால் குண்டும், குழியுமான சின்னப்பனையூர் சாலை சீரமைக்கப்பட்டது. கரூர் மாவட்டம் தோகைமலை அருகே தளிஞ்சி ஊராட்சியில் உள்ள டி.மேலப்பட்டி வடக்குமேட்டில் இருந்து சின்னப்பனையூருக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலை டி.மேலப்பட்டி வடக்குமேட்டில் இருந்து பாரதிநகர், ரெங்காச்சிப்பட்டி பிரிவு, செம்மேடு, பாகுழி வழியாக சின்னப்பனையூர் வரை செல்கிறது. சுமார் 4 கி.மீ தொளைவு கொண்ட இத்தார்சாலை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக கள்ளை, கூடலூர், நல்லூர் போன்ற ஊராட்சியில் உள்ள குக்கிராமங்களில் இருந்தும், டி.மேலப்பட்டி மற்றும் புரசம்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் திருச்சி பகுதிக்கு சென்றுவர அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த சாலையில் தற்போது தார் பழுதாகி பெரும்பாலான இடங்களில் ஜல்லிகற்கள் பெயர்ந்து இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் செல்வதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகதெரிவித்தனர். இதனால் அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் உட்பட மற்ற வாகனங்களும் செல்லமுடியாத நிலையில் சாலை பழுதாகி உள்ளதாக  மக்கள் கூறினர். இதுகுறித்து டி.மேலப்பட்டி வடக்குமேட்டில் இருந்து சின்னப்பனையூருக்கு செல்லும் பழுதான தார்சாலையை சரி செய்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று இப்குதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும்அதிகாரிகள் எடுக்கவில்லை.ஆகவே போக்குவரத்திற்கு உகந்தநிலையில் இல்லாத டி.மேலப்பட்டி வடக்குமேட்டில் இருந்து சின்னப்பனையூருக்கு செல்லும் பழுதான தார்சாலையை சரிசெய்து புதிய தார்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்த செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளிவந்தது.

இதன் எதிரொலியாக மாவட்ட நிர;வாகத்தின் உத்தரவின்  பேரில் தளிஞ்சி டி.மேலப்பட்டி வடக்குமேட்டில் இருந்து சின்னப்பனையூருக்கு செல்லும் பழுதான தார்சாலையை சரிசெய்து புதிய தார்சாலையை அமைத்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழ் மற்றும் நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...