×

குளித்தலை மகாமாரியம்மன் கோயிலில் தேரோட்டம்

குளித்தலை, மே22: குளித்தலை  மகாமாரியம்மன் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் மாவட்டம், குளித்தலை மகாமாரியம்மன்கோயில் திருவிழாவையொட்டி கடந்த 5ம் தேதி பூச்சொரிதலுடன் விழா தொடங்கியது. 12ம் தேதி உற்சவர் அம்மன் கடம்பர் கோயிலிலிருந்து அழைத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து தினந்தோறும் மண்டகப்படிதாரர்களால் பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்து முக்கிய வீதி வழியாக  அம்மன் வீதிஉலா நடைபெற்றது. முக்கிய விழாவான ஞாயிற்றுகிழமை பெரியபால்குட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தினர். அன்று இரவு அரன்மணை மாவிளக்கு நடைபெற்றது.முக்கிய விழாவான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது.

காலை 10.40 மணிக்கு மேல் சிறப்பு  அலங்காரத்தில் உற்சவர் அம்மன் தேரில் எழுந்தருளினார். பின்னர் பொதுமக்கள், பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். கோயில் நிலையிலிருந்து புறப்பட்டு கடைவீதி, பஜனைமடம், பெரியாண்டார்தெரு, எம்.பி.எஸ் அக்ரஹாரம், டவுன்ஹால்தெரு தேரோடும் வீதி வழியாக உற்சவர்  அம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று மதியம் 2.30 மணி அளவில்  தேர் நிலையை அடைந்து, பின்னர் கோயில் முன்பாக அமைக்கப்பெற்ற பூக்குழியில் விரதமிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் 2 பேர் படுகாயமடைந்தனர். விழாவில் சுற்றுவட்டாரத்திலிருந்து  திரளான மக்கள் கலந்து கொண்டனர். இரவு பஸ்நிலையத்தில் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை( 23ம் தேதி) வியாழக்கிழமை இரவு ஊட்டத்தூர்  முத்துபல்லக்கு நிகழ்ச்சியும், 24ம் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவில் டிஎஸ்பி சுகுமார் தலைமையில்  இன்ஸ்பெக்டரடகள் பாஸ்கரன், முகமதுஇத்ரிஸ் மற்றும் போலீசார் ஊர்காவல் படையினர், தீயணைப்புதுறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : bathroom ,Mahakarmai ,
× RELATED கடந்த 3 ஆண்டுகளில் போலீஸ் ஸ்டேஷனில்...