×

அதிமுக பிரமுகர் காரில் ஆந்திராவுக்கு கடத்திய 100 கிலோ கடல் மண்புழுக்கள் பறிமுதல்

சென்னை: தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு கடல் மண்புழுக்கள் கடத்தப்படுவதாக ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது, அவ்வழிேய வந்த சேர்மன் என்று எழுதப்பட்ட விலை உயர்ந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஐஸ் பெட்டிகளில் சுமார் 100 கிலோ கடல் மண்புழுக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரை ஓட்டி வந்தவர் மற்றும் உடன் இருந்தவரை ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், பொன்னேரி பகுதியைச் சேர்ந்த அஜித் (25) மற்றும் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த அருள் (42) ஆகியோர் என தெரியவந்தது.

மேலும் இந்த கடல் மண்புழுக்கள் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதிக்கு கடத்தி செல்வது தெரிந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் மண் புழுக்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் வந்த கார் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த அதிமுக மீன்வள கூட்டுறவு சங்க துணை தலைவர் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : AIADMK ,Andhra ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...