×

பராமரிப்பின்றி உருக்குலைந்த செய்துங்கநல்லூர்-சிவந்திபட்டி சாலை சீரமைப்பு பணி துவக்கம்

செய்துங்கநல்லூர், மே 22: பராமரிப்பின்றி உருக்குலைந்த நிலையில் இருந்து வந்த செய்துங்கநல்லூர்- சிவந்திபட்டி சாலை சீரமைப்பு பணியை நெடுஞ்சாலைத்துறை தற்போது துவக்கியுள்ளது.  நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் செய்துங்கநல்லூரில் இருந்து சிவந்திபட்டிக்கு செல்லும் சாலை  முறையான பராமரிப்பின்றி உருக்குலைந்தது. இந்த சாலை பகுதியில் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி,  செயிண்ட மேரீஸ் கல்வியல் கல்லூரி உள்ளன. அத்துடன் பிரசித்திபெற்ற சுந்தரபாண்டிய சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. மேலும் ஸ்ரீராமன்குளம், குத்துகல், முத்தூர், கொடிக்குளம், சிவந்திபட்டி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் சாலையாக இது திகழ்கிறது. இருப்பினும் அதிகாரிகளின் பாராமுகத்தால் குண்டும், குழியுமாக உருக்குலைந்துபோனது.  இதனால் இங்குவரும் இருசக்கர வாகனங்கள் குறிப்பாக திருச்செந்தூர் மெயின்ரோட்டில் இருந்து சிவந்தி பட்டி சாலையில் இறங்கும் போதே  சாலையில் சேதமடைந்த பள்ளத்தில் சிக்கி விபத்துக்கு உள்ளாகின்றன.  இதனால் மக்கள் படும் அவதிகள் குறித்து தினகரனில் செய்தி வெளியானது. இதையடுத்து உருக்குலைந்த இச்சாலையை சீரமைக்கும் பணியை வைகுண்டம் நெடுஞ்சாலை துறை மேற்கொண்டுள்ளது. சுமார் ரூ.50 லட்சத்தில் முதற்கட்டமாக 1 கி.மீ. தொலைவுக்கு சாலை சீரமைப்பு பணி நடந்தது. இப்பணியை நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் தர்மராஜ், உதவிப் பொறியாளர் கணேஷ், சாலை ஆய்வாளர் சுசிலா பார்வையிட்டனர்.

Tags : Nallankur-Sivanthipatti ,
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு