×

உள்ளாட்சி தேர்தல் குறித்து வாக்குச்சாவடி பட்டியல் இல்லாமல் ஆலோசனை

திருப்பூர், மே21:திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இல்லாமல் நேற்று மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். இதனால், அரசியல் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்தனர். திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று உள்ளாட்சித் தேர்தல் - 2019, நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் அமைத்தது தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவற்றில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்- 2019 தொடர்பாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான கலந்தாலோசிப்பதற்கான கூட்டம் மாவட்ட கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கருத்துக்கள் பெறப்பட்டது. அதற்குரிய விளக்கத்தினை மாவட்ட கலெக்டர் எடுத்துரைத்தார். ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு கலந்தாலோசிப்பதற்கான கூட்டம் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி மூலமாக நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

 கூட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடவில்லை. இதனால், வாக்காளர்கள் எளிய முறையில் வாக்குச்சாவடி மையங்கள் செல்லமுடியுமா, விடுப்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது போன்ற விவரங்கள் அடங்கிய பட்டியல் இல்லாமல் கூட்டம் நடத்தியது அதிருப்தி அளிக்கிறது. மேலும், இதுபோன்று முறையான ஏற்பாடுகள் இல்லாமல் கூட்டம் நடத்துவது எங்களது நேரத்தை வீணடிக்கிறது. இது தேவையற்றக் கூட்டம் என அனைத்து அரசியல் கட்சியினரும் கடும் அதிருப்தி அடைந்தனர்.கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்  குமார், திருப்பூர் மாநகராட்சி கமிஷ்னர் சிவகுமார், ஊராட்சிகள் உதவி  இயக்குநர் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான அதிமுக, மதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags : elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...