×

சுற்றுலா பயணிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளும் உள்ளூர் போலீசார்

குன்னூர்,  மே 21: குன்னூரில் உள்ளூர் போலீசார் வாகன பரிசாேதனை என்ற பெயரில்   சுற்றுலா பயணிகளிடம் கடுமையாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது  நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா துவங்கி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு  தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் மாவட்டத்திற்கு வந்து  செல்கின்றன. இதனால் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.  மாவட்ட நிர்வாகம் சார்பில் சமவெளி பகுதிகளில் இருந்து கூடுதல் போலீசார்  வரவழைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படால் தடுக்கவும், சுற்றுலா  பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். மாவட்டத்தில்  வெளியூர் போலீசார் சுற்றுலா பயணிகளிடையே அன்பாகவும் அவர்களுக்கு தேவையான  தகவல்களை வழங்கி வருகின்றனர்.

ஆனால் உள்ளூர் போலீசார் சுற்றுலா  பயணிகளிடையே வாகன பரிசாேதனை என்ற பெயரில் சுற்றுலா பயணிகளிடம் கடுமையாக  நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக குன்னூர் - ஊட்டி சாலையில்  உள்ள அருவங்காடு மற்றும் வெலிங்டன் போலீசார் போக்குவரத்து நெரிசலை  சீரமைக்காமல், சாலையில் நிறுத்தப்படும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு  லாக் போடுவதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் போலீசார்  சுற்றுலா பயணிகளிடம் மிரட்டும் பாணியில் நடந்து கொள்வதால் அவர்கள்  அதிருப்தியடைந்து வருகின்றனர். இது குறித்து மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : policemen ,
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...