×

கோ-கோ பிரீமியர் லீக் கோவை அணி சாம்பியன்

கோவை, மே 21: கோவையில் நடந்த கோ-கோ பிரீமியர் லீக் போட்டியில் கோவை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தமிழ்நாடு கோகோ கூட்டமைப்பு சார்பில் கோகோ பிரீமியர் லீக் போட்டி கோவை ஸ்ரீ ரங்கநாதர் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 17ம் தேதி துவங்கியது. இதில், ஆண்கள் பிரிவில் 8 அணிகள், பெண்கள் பிரிவில் 4 அணிகள் பங்கேற்றன. இதன் இறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில், பெண்கள் பிரிவில் கோவை ஸ்பீடிஸ் அணியும், சென்னை குயின்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் கோவை அணி 8-4 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆண்கள் பிரிவில் கோவை சேசர்ஸ் அணியும், சென்னை டைகர்ஸ் அணியும் மோதின. பரபரப்பான இப்போட்டியில் சென்னை அணி 15-13 என்ற புள்ளி கணக்கில் வென்று கோப்பையை தட்டிசென்றது. இதில், சிறந்த வீரர்களாக கோவை அணியின் கோபாலகிருஷ்ணன், பிரபாகரன், மதுரை அணியின் சதீஷ் தேர்வு செய்யப்பட்டனர்.  பெண்கள் பிரிவில் கோவை அணியின் சத்யா,
கவியரசி, சென்னை அணியின் அர்ச்சனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags : Premier League ,Co-Go ,
× RELATED பிரிமியர் லீக் கால்பந்து முதல் முறையாக லிவர்பூல் சாம்பியன்