×

புதிய நிர்வாகிகள் தேர்வு

கோவை, மே 21: தி ஈவன்ட் மேனேஜர்கள் சங்கத்தின் (டேமா) புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவையில் நடந்தது. இது கொடிசியாவில் வரும் செப்டம்பர் மாதம் 27ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கும் வெட்டிங் கண்காட்சியின் துவக்க விழாவாகவும் நடந்தது. இதில், கீர்த்திலால்ஸ் நிர்வாக இயக்குனர் சாந்தக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கவுரவ விருந்தினராக பார்க் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி அனுஷாரவி, நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில், ராஜ்மெலோடிஸ் தலைவர் ராஜன் கண்காட்சி தலைவராகவும், துணை தலைவராக புளோரா வெட்டிங் பிளானர் ரேஷ்மா ஜா மற்றும் செந்தில்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். சங்கத்தின் புதிய தலைவராக விசி.ஸ்ரீசைலம், துணைத்தலைவராக ஸ்மிதா பட்டீல், செயலாளராக கார்த்திகேயன், இணை செயலாளராக அந்தோணி ஜான் பிரிட்டோ, பொருளாளராக முகமது ஆயுப் ஆகியோர் பொறுப்பேற்றனர். புதிய செயற்குழு உறுப்பினர்களாக ராஜன், டி.செந்தில்குமார், மதிரேஷ்மா, ஜாய், மாத்யூ நவீன்குமார், சுரேஷ்குமார், ஜே.செந்தில்குமார், ஜெ.செந்தில்குமார், சரவணகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மக்கள் தொடர்பு புதிய தலைவராக வசந்த்கோபால் தேர்வு செய்யப்பட்டார். காயத்திரி ஈவன்ட்ஸ் செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED புதிய நிர்வாகிகள் தேர்வு