×

தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிடாத தாது உப்பு கலவை பாக்கெட்கள்

காங்கயம்,மே21:காங்கயம் பகுதியில் விநியோகம் செய்யப்படும் ஆவின் நிறுவனத்தின் தாது உப்பு கலவை பாக்கெட்டுகளில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத காரணத்தால் பால் உற்பத்தியாளர்கள்
அதிருப்தியடைந்துள்ளனர்.காங்கயம் பகுதியில் நூற்றுக்கணக்கான பால்உற்பத்தியாளர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கொள்முதல் செய்யப்படும் பால் ஈரோடு அடுத்துள்ள சித்தோடு ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு அங்கு பால்கோவா, பால்பவுடர், பாக்கெட் பால், உள்ளிட்ட என மாற்றப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

ஆவின் நிறுவனமானது பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு மாடுகளுக்கு கொடுக்கக் கூடிய தாது உப்புக் கலவை பாக்கெட்டுகளை வழங்குகின்றன. இந்த பாக்கெட்டுகளில் சமீப மாதங்களாக தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் இருப்பதால் அதை வாங்கிப் மாடுகளுக்கு கொடுக்கும் விவசாயிகள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் மரவபாளையம் விஸ்வநாதன் கூறுகையில், ‘‘ஆவின் நிறுவனத்தால் வழங்கப்படும் தாது உப்புக்கலவையில் தயாரிப்பு, காலாவதி தேதி அச்சிடப்படாததால் பழைய ஸ்டாக்குகளை விவசாயிகளுக்கு வழங்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே ஆவின் நிறுவனம் பாக்கெட்டுகளில் தயாரிப்பு, காலாவதி திகளை குறிப்பிட வேண்டும்.
தவிர ஆவின் கலப்பு தீவன மூட்டைகளிலும் சமீப மாதங்களாக தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாமல் உள்ளது. இது தொடர்பாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தயாரிப்பு, காலாவதி தேதிகளை குறிப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்