×

ஆண்டிபட்டி அருகே இடிந்து விழும் அரசு பள்ளி

ஆண்டிபட்டி,மே 21: ஆண்டிபட்டி அருகே உள்ள குருவியம்மாள்புரம் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி கட்டிடத்தின் சன்சைடு இடிந்தும், கம்பிகள் துருப்பிடித்து  அபாயக நிலையில் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் முன் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி அருகே கோவில்பட்டி ஊராட்சியில் குருவியம்மாள்புரம் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில்  20க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு 2 ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர்.  கடந்த   17 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடம் வலுவிழந்து பக்கவாட்டு (சன் சைடு) சுவர்களில் உள்ள காரைகள் பெயர்ந்து கீழே விழுந்து வருகின்றன. அத்துடன்  கம்பிகள் துருபிடித்தும், நீட்டிக் கொண்டும், தொங்கிக் கொண்டு அபாயகரமாக காணப்படுகிறது.

இன்னும் சில தினங்களில் பள்ளி திறக்க உள்ளதால், விபத்து ஏற்படும் முன் அரசு அரசு உடனடியாக வலுவிழந்த பள்ளி கட்டிடத்தை சரி செய்யுமாறு ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், `` அரசு துவக்கப்பள்ளி கட்டிடம் கட்டி 17 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்டிடத்தின் சிமெண்ட் கற்கள் பெயர்ந்து கீழே விழுந்தது. மேலும் கட்டிடத்தில் கம்பிகள் துருப்பிடித்தும், தொங்கிக் கொண்டு அபாயகரமாக உள்ளது. இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். ஏற்கனவே அரசு பள்ளியில் சிறுவர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் சூழ்நிலையில், தற்போது கட்டிடம் வலுவிழந்து காணப்படுவதால் பெற்றோர்கள், குழந்தைகளை மாற்றுப் பள்ளிக்கு அனுப்புவதற்கு தயாராகி வருவதாக தெரிகிறது. இதனால் தேனி மாவட் கலெக்டர் பல்லவி பல்தேவ்  உடனடியாக இப்பள்ளியை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

Tags : state school ,Andipatti ,
× RELATED ‘தானேனானன்னா னானா… ஆ…’ அதிமுக...