×

கூடைப்பந்து லீக் சுற்று இந்தியன் வங்கி அணி ஏஓசியை வென்றது

பெரியகுளம், மே 21: பெரியகுளத்தில் 60ம் வைரவிழா ஆண்டு அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் அகில இந்திய அளவில் தலை சிறந்த அணிகள் விளையாடி வருகின்றன. போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடைபெற்றன. லீக் சுற்றினை தேனி மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். விளையாட்டு விழாவில், 60 ஆம் வைரவிழா ஆண்டு மலரை எஸ்.பி.பாஸ்கரன் வெளியிட தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்புராஜ் பெற்றுக்கொண்டார். லீக் சுற்றின் முதல் போட்டியில்  நடைபெற்ற முதல் போட்டியில் பெங்களூரு பாங்க் ஆப் பரோடா(விஜயா வங்கி) அணி 78 புள்ளிகள் எடுத்து இந்திய தரைப்படை அணியினை வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் சென்னை இந்தியன் வங்கி அணி 94 புள்ளிகள் எடுத்து செகந்திராபாத் ஏஓசி அணியை வென்றது. விளையாட்டுப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சில்வர் சூப்லி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலர் சிதம்பரசூரியவேலு, தலைவர் அமர்நாத், துணைத்தலைவர் அபுதாகிர், பொருளாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags : basketball league ,bank team ,Indian ,AOC ,
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்