மாலையில் படியுங்கள் மாவட்டம் கம்பத்தில் முத்ரா திட்டத்திற்கு அல்வா கொடுக்கும் வங்கிகள்

கம்பம், மே 21: கம்பம் பகுதிகளில் முத்ரா திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன்கள் தராமல் இழுத்தடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கம்பம் நகரில் அதிகமான அளவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. கம்பம் பள்ளத்தாக்கு விவசாயம் சார்ந்த பகுதிகள் என்பதால் இது சார்ந்த தொழில்களைச் செய்ய கடன் பெற அணுகுகின்றனர். குறிப்பாக, பாரத பிரதமர் மோடியின் முத்ரா திட்டத்தின் கீழ் சிறுதொழில் தொடங்கிட ரூ.25ஆயிரம் முதல் பல லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதனால் அதிகமானஅளவில் மக்கள் தினந்தோறும் கடன் வாங்கிட விண்ணப்ப மனுக்களை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு சென்று தருகின்றனர். இதனைப் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பில் கிளைமேலாளர் மற்றும் கடன் வழங்கும் அதிகாரிகள் உள்ளனர்.

ஆனால், முத்ரா கடன் என்றாலே கண்டும், காணாமல் உள்ளனர். இதனால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், பொருளாதார ரீதியாக தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திட வங்கிகளுக்கு சென்று கடன் கேட்டால் இல்லை என கைவிரிக்கும் நிலை தொடர்கதையாகி வருகிறது. எனவே, முத்ரா திட்டத்தில் பெண்டிங் உள்ள மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், `` கம்பத்தில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் முத்ரா கடன் திட்டம் என்றாலே கண்டும், காணாமல் உள்ளனர். கடன் கேட்கும். மக்களை அலைக்கழிக்கின்றனர். இந்த விண்ணப்பங்கள் எங்கு செல்கிறது எனக் கேட்டால் பதில் இல்லை. குறிப்பாக ஏழைகள் கேட்கும் கடனுக்கு ஒருமையில் பதில் வருகிறது. எனவே, உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் கடன் கிடைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.

Tags : banks ,pole district ,
× RELATED வங்கிகள் இணைப்பை கண்டித்து ஊழியர்கள் தர்ணா போராட்டம்