×

மாவட்டம் குடிநீர் தட்டுப்பாடு மூணாறு அருகே மீன்பிடிக்கச் சென்றவர் அணையில் மூழ்கி சாவு

மூணாறு,மே 21: மூணாறு அருகே ஆணையிறங்கல் அணையில் மீன்பிடிக்கச் சென்றவர் மூழ்கி இறந்து போனார். மூணாறு அருகே உள்ள ஆணையிறங்கல் அணையில் நேற்று மாலை 40 வயது மதிக்கத்தக்க இறந்த ஆணின் உடல் கிடந்தது. சந்தன்பாறை போலீசார் அந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அவர் சின்னக்கானல்  காலனியில் செம்பகத்தொழு குடியை சேர்ந்த மயில்சாமி(45) என்பது தெரிய வந்தது.  போலீசார் கூறுகையில், மீன் பிடிக்கும் அணையில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்புள்ளதாக முதற் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறினர்.உயிரிழந்த மயில்சாமிக்கு செல்வி என்ற மனைவியும், மீனாட்சி, செல்வகுமார் என்ற குழந்தைகளும் உள்ளனர்.

Tags : drinking water district ,Munnar ,
× RELATED மூணாறு அருகே பரிதாபம்; செந்நாய்கள் தாக்கி 40 ஆடுகள் உயிரிழப்பு