×

நிர்வாகிகள் கூட்டம்

தொண்டி, மே 21:   தமிழ்நாடு தவ்கித் ஜமாத் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று தொண்டியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரமீஸ் தலைமை வகித்தார். தொண்டி தலைவர் செய்யது அகமது முன்னிலை வகித்தார். நோன்பு காலங்கள் மற்றும் ரம்ஜான் பண்டிகையின் போது தவ்கித் ஜமாத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இலங்கையில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருததுவமனையாக தரம் உயர்த்த வேண்டும். வரும் கல்வி ஆண்டில் அனைத்து அரசு பள்ளியிலும் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாவட்ட செயலாளர் செய்யது நெய்னா நன்றி கூறினார்.

Tags : Meeting ,executives ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...