×

குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் வீரமச்சான்பட்டி கிராமத்தினர் மனு

ராமநாதபுரம், மே 21:  கமுதி தாலுகா வீரமச்சான்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளித்துள்ள மனுவில், கிராமத்தில் 1500 பேர் வசிக்கின்றனர். கிராமத்தில் உள்ள பழைய நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இன்று வரை தண்ணீர் ஏற்றப்பட வில்லை. கிராமத்தில் ஒரு ஆழ்துளைக் கிணறு பம்ப் மட்டுமே உள்ளது. இதனால், குடிக்க, பிற தேவைகளுக்கும், கால்நடைகளுக்காகவும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவல நிலையில் உள்ளோம்.

ஊரில் 10க்கும் மேற்பட் மின்கம்பங்கள் சேதடைந்து விழும் நிலையில் உள்ளது. உயிரை பலிவாங்க காத்திருக்கும் மின்கம்பங்களை மாற்ற உத்தரவிட வேண்டும். தெருக்களில் கழிவு நீர் கால்வாய் சரியாக பராமரிக்க வில்லை. கழிவுநீர் தெருக்களில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்றுநோய் பாதிப்புக்கும் உள்ளாகி வருகின்றனர். கிராமத்திற்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை