×

ராமநாதபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு கலெக்டர் தகவல்

ராமநாதபுரம், மே 21:  ராமநாதபுரம் பாராளுமன்றம் மற்றும் பரமக்குடி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற்ற உள்ளது. வாக்கு எண்ணும் பணிக்காக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஏற்கெனவே இரண்டு கட்ட பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், நேற்று மூன்றாம் கட்டப்பயிற்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. பயிற்சிக்கு பின் கலெக்டர் கூறுகையில், ராமநாதபுரம் பாராளுமன்றம் மற்றும் பரமக்குடி சட்டப்பேரவை இடைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணிக்காக சம்பந்தப்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்து வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்வது குறித்தும், அதற்காக கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம், தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்புப் படையினர், காவல் துறையினர் என 1000 பேர் வாக்கு எண்ணும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்
திலும், அதைத் சுற்றிலும் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.   வாக்கு எண்ணிக்கை 30 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெறும் என்பதால் அதற்காக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags : police officers ,Ramanathapuram ,vote count center ,
× RELATED படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி...