×

ஆரோக்கியமாக குழந்தை வளர்க்க அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி

ராமநாதபுரம், மே 21:  ராமநாதபுரம் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் செயல்படுத்தபடுகிறது. அங்கன்வாடி மையங்களில் 5வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி, பகல் உணவும் வழங்கப்பட்டு வருகிறது. படிக்கும் குழந்தைகள் போதிய ஆரோக்கியத்துடன் வளர்கிறதா என்பதை மைய பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகிறது. குழந்தைகளை வயதுக்கேற்ற வளர்ச்சி மற்றும் ஆராக்கியத்துடன் இருப்பதை அறிய அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி நடத்தப்பட்டது. மே மாதம் 2ம் தேதியிலிருந்து 8ம் தேதி வரை ராமநாதபுரம், திருவாடானை, நயினார்கோவில் ஒன்றியங்களை சேர்ந்த பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

முதல்கட்ட பயிற்சியில் 480 பணியாளர்கள் கலந்துகொண்டனர். மே 8ம் தேதியிலிருந்து 10ம் தேதி வரை பணியில் சேர்ந்து 6 மாதம் காலம் ஆன பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 720 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியின் முடித்த பணியாளர்களுக்கு அரசு சார்பில் குழந்தைகள் எடை மற்றும் உயரத்தை அளக்கும் கருவிகள் வழங்கப்பட்டது. மேலும் உயரத்திற்கேற்ற எடை, எடைக்கேற்ற உயரம், வயதுக்கேற்ற எடை மற்றும் உயரம் உள்ளதை உறுதி செய்யவேண்டும் என்றும் சிறிய அளவிலான மாற்றம் இருந்தால் தேவையான ஊட்டச்சத்துகள் வழங்கவும், அதிக அளவிலான எடை மற்றும் உயரத்தில் அதிக அளவிலான மாற்றம் இருந்தால் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களை அழைத்து தேவையான மருத்துவ வசதிகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

குழந்தைகளை தாக்கும் ரத்தசோகை உள்ளிட்டவை கண்டறியப்பட்டு ஆண்டுக்கு 2%  குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் 19ம் தேதியில் இளம் தாய்மார்கள், பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் ஆலோசனை வழங்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி ஆலோசனை வழங்குவார்கள் என சமூகநலத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். மாவட்டத்தில் 1,247 முதன்மை அங்கன்வாடி மையங்களும், 207 குறுஅங்கன்வாடி மையங்கள் என 1,454 அங்கன்வாடி மையங்களில் செயல்படுத்தப்படுகிறது.

Tags : Anganwadi ,baby ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியத்தில் ரூ.36...