மரத்தில் கார் மோதி 6 பேர் படுகாயம்

திருப்புத்தூர், மே 21: நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரதிப்குமார்(34). இவர் நேற்று சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைக்கு துக்கம் விசாரிக்க குடும்பத்தினருடன் காரில் வந்தார். சிங்கம்புணரியை அடுத்த திருப்புத்தூர் அருகே தனியார் மேல்நிலைப்பள்ளி பகுதியில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த பிரதீப்குமார், அவரது தந்தை ஜோசப்(55), தாய் மாரியம்மா(52), மனைவி லில்லிமலர்(33) மற்றும் நண்பர்களான இளங்கேஸ்வரன்(38), ஜோசின் பெர்ணான்டோ(35) ஆகிய 6 பேர் காயமடைந்தனர். அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : car crash ,
× RELATED சாலையோர மரத்தை வெட்டிய மர்ம நபர்கள்...