பழநியாண்டவர் மகளிர் கல்லூரியில் கலந்தாய்வு

பழநி, மே 21: பழநியாண்டவர் மகளிர் கல்லூரியில் துவங்கிய கலந்தாய்வில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். பழநி அருகே சின்னக்கலையம்புத்தூரில் பழநியாண்டவர் மகளிர் கல்லூரியில் அரசு உதவிபெறும் கல்விப்பிரிவு மற்றம் சுயநிதிப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளில் உள்ள 10 துறைகளில் சுமார் 500 காலி இடங்கள் உள்ளன. சுயநிதிப்பிரிவில் சுமார் 240 காலி இடங்கள் உள்ளன. இவற்றில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப்பிரிவு மற்றும் ராணுவ குடும்பத்தினரின் இடஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. கல்லூரியின் முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். கலந்தாய்வில் ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் பெற்றோருடன் பங்கேற்றனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கல்லூரியில் இடமளிக்கப்பட்டது. தொடர்ந்து பொது கலந்தாய்விலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மே 22ம் தேதி வரை அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. மே 24, 25ம் தேதிகளில் சுயநிதி பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tags : Women's College ,Paliniyandi ,
× RELATED காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் சத்தான உணவு திருவிழா