×

விழிப்புணர்வு சுவர் விளம்பரம் அரசு மருத்துவமனைக்கு நல உதவிகள் வழங்கல்

ராசிபுரம், மே 21: ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு ராயல் ரோட்டரி சங்கம் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ரோட்டரி ஆளுநர் நிர்மல் பிரகாஷ்,  துணை ஆளுநர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்று, அரசு மருத்துவமனை ரத்த ஆய்வு மையத்திற்கு ₹10 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், உடல் ஊனமுற்றோருக்கான ஊன்றுகோள்களை வழங்கினர். நிகழ்ச்சியில் சிவக்குமார், வரதராஜன், பாலாஜி, மருந்தாளுனர் ராஜீ, ரவி, சத்தியமூர்த்தி, வழக்கறிஞர்கள் அன்பழகன், நடராஜ் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Government Hospital ,
× RELATED அரசு மருத்துவமனையில் நாள்தோறும் உணவு