×

காரிமங்கலம் பேரூராட்சியில் குளம் போல் தேங்கிய கழிவு நீரால் சீர்கேடு

காரிமங்கலம், மே 21: காரிமங்கலம் பேரூராட்சி பகுதியில், குளம் போல் கழிவுநீர் தேங்கியதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காரிமங்கலத்தில் உள்ள 15 வார்டுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பல வார்டுகளில் கால்வாய்கள் இல்லாததால் கழிவுநீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கழிவு நீரை அகற்ற பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. இந்நிலையில், கிருஷ்ணகிரி சாலை பி.டி.ஓ அலுவலகம் அருகே குடியிருப்பு பகுதிகளில் இருந்து, கழிவு நீர் செல்ல கால்வாய் வசதி இல்லாததால், அப்பகுதியில் கழிவு நீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த கழிவுநீரில் பன்றிகள் விழுந்து புரண்டு சாலையின் குறுக்கே ஓடுகின்றன. எனவே, கிருஷ்ணகிரி சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா