×

தி.பூண்டி நகராட்சி அலுவலகம் அருகில் தூர் வாராததால் செடிகள் மண்டிய ராமர் மட குளம்

திருத்துறைப்பூண்டி, மே 21: திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் அருகில் தூர் வாராததால் செடி கொடிகள் மண்டி காணப்படும் ராமர் மட குளத்ைத தூர் வார வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி அருகில் உள்ள ராமர்மடம் குளம் ராமர் மடத்திற்காக பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் ராமர்மடம் ராமர் கோயிலாக மாறியது. ஒரு காலத்தில் இந்த குளத்தில் உள்ள தண்ணீரை குடிநீராக நகர மக்கள் பயன்படுத்தி வந்தனர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு குளத்தை குடிநீருக்கு பயன்படுத்தாமல் நகர மக்கள் மற்றும் பொதுமக்கள் குளத்தில் குளிப்பது வழக்கம். காலப்போக்கில் குளம் பராமரிப்பு இல்லாததால்  பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை. குளம் அருகில் நகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த பகுதிக்கு வருபவர்கள் எல்லாம் நகராட்சிக்கு சொந்தமானது என்று நினைத்து ஏன் தூர்வார வில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால் இந்த குளம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும். கோயில் நிர்வாகம் குளத்தை தூர்வார எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இந்த குளத்தில் பல்வேறு செடிகொடிகள் மண்டி கிடக்கிறது. சேவை சங்கங்களிடம் ஒப்படைத்தால் குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்கள். எனவே ராமர்மடம் குளத்தை தூர்வார இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

Tags : Rama Madam Pond ,buddy ,office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்