×

சாக்கோட்டை ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி

கும்பகோணம், மே 21: கும்பகோணம் அடுத்த சாக்கோட்டை தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் அலங்கார தேர்பவனி நடந்தது. இதையொட்டி கடந்த 17ம் தேதி மாலை கொடியேற்றம் நடந்தது. கடந்த 18ம் தேதி காலை நவநாள் ஜெப வழிபாடு நடந்தது.   நேற்று முன்தினம் மாலையில் கூட்டு திருப்பலி நடந்தது. இதைதொடர்ந்து மின்னொளி அலங்காரத்தில் தேர்பவனி  நடந்தது. நேற்று மாலை கொடியிறக்கம் நடந்தது. பாபநாசம்: பாபநாசம் அருகே தேவராயன்பேட்டை அடுத்த புளிமங்களம் புனித செபஸ்தியார் ஆலய தேர்பவனி நடந்தது. இதையொட்டி 14ம் தேதி கொடி ஊர்வலம் நடந்தது. இன்று தேர்பவனி நடக்கிறது. இதேபோல் அய்யம்பேட்டை அடுத்த அகரமாங்குடி வியாகுல அன்னை தேர் திருவிழாவையொட்டி கடந்த 1ம் தேதி கொடியேற்றம், 17ம் தேதி கூட்டு பாடல் திருப்பலி, தேர்பவனி நடந்தது.

Tags : Sakkottai Wellness Mother Temple Derpavani ,
× RELATED ஒரே இடத்தில் பயணிகளுக்கு பரிசோதனை...